For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! பிரபல சீரியல் நடிகை பவித்ரா சாலை விபத்தில் உயிரிழப்பு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

07:54 AM May 13, 2024 IST | Chella
பெரும் சோகம்     பிரபல சீரியல் நடிகை பவித்ரா சாலை விபத்தில் உயிரிழப்பு     அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement

தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கில் 'திரினயானி'  தொடரில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கர்நாடகாவின் மண்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் ஐதராபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று காரின் வலது புறத்தில் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement