பெரும் சோகம்..!! முன்னாள் MLA பி.ஆர்.சுந்தரம் காலமானார்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!
ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. அதிமுகவில் நீண்ட காலம் பயணித்தவர். இவர், அதிமுகவில் இருந்த போது இரண்டு முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996 - 2001 வரையிலும், 2001 - 2006 வரையிலும் இராசிபுரம் தொகுதி எம்எல்ஏ-வாக செயல்பட்டவர்.
இதனைத் தொடர்ந்து 2014 - 2019 வரை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து பிரிந்த பி.ஆர்.சுந்தரம், கடைசி காலத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு திமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் கட்சிப் பணிகளில் அதிகம் தலை காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பி.ஆர்.சுந்தரம் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : அலங்காநல்லூரில் ஆட்டம் காட்டிய விஜயபாஸ்கர், சூரியின் காளைகள்..!! தங்க மோதிரம் வென்று அசத்தல்..!!