பெரும் சோகம்!. இந்திய அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு!. உயிரை பறித்த ரத்த புற்றுநோய்!
RIP: ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ரன்களும், 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்களும் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். 1983ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 201 ரன்களை எடுத்திருந்தார். இது தவிர 1990 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது வழிகாட்டுதலில் இந்திய அணி கோகோ கோலா டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது 71 வயதாகும் அன்ஷுமான் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு ஆதரவாக கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிகிச்சைக்காக பண உதவி வழங்கினர். இதேபோல், பிசிசிஐ அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியது.
இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கெய்க்வாட் மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Readmore: மக்களே…! இன்று முதல் அமலுக்கு 4 முக்கிய மாற்றங்கள்…! முழு விவரம்