For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெய்க்வாட் காலமானார்..!!

02:16 PM Feb 13, 2024 IST | 1newsnationuser6
பெரும் சோகம்     இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெய்க்வாட் காலமானார்
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தையும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

Advertisement

இவரே தற்போது வரை இந்தியாவின் மிக நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். தத்தாஜிராவும் இந்தியாவுக்காக 9 ஆண்டுகள் விளையாடியுள்ளார். தத்தாஜிராவ் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார். அன்ஷுமான் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அன்ஷுமான் 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக விளையாடினார்.

கடந்த 1952இல் தத்தாஜிராவ் கெய்க்வாட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தனது கடைசி டெஸ்டில் 1961இல் பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் விளையாடினார். இந்திய அணியில் அறிமுகமான பிறகு, தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.

பிறகு, கடந்த 1959ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார். அப்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தத்தாஜிராவ் நீண்ட காலமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தார். உதா 1957-58 சீசனில், பரோடா அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. அப்போது, பரோடா அணிக்கு தலைமை தாங்கி வென்று கொடுத்தவர் தத்தாஜிராவ் கெய்க்வாட்தான்.

2016 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் தத்தாஜிராவ் கெய்க்வாட். இவருக்கு முன், தீபக் ஷோதன் இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்தார். முன்னாள் பேட்ஸ்மேன் தீபக் ஷோதன் தனது 87-வது வயதில் அகமதாபாத்தில் காலமானார். தற்போது தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement