For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்!. பிரபல பாப் பாடகர் உயிரிழப்பு!. பால்கனியில் இருந்து கீழே விழுந்ததில் விபரீதம்!

One Direction star Liam Payne dies at 31 after falling from hotel balcony in Argentina
09:05 AM Oct 17, 2024 IST | Kokila
பெரும் சோகம்   பிரபல பாப் பாடகர் உயிரிழப்பு   பால்கனியில் இருந்து கீழே விழுந்ததில் விபரீதம்
Advertisement

RIP: உலகின் பிரபல பாப் பாடகரான லியாம் பெய்ன், பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உலகளவில் பிரபலமான பாப்-இசை குழு ஒன் டைரக்ஷன். 1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜென்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த கோஸ்டா ரிக்கா தெருவில் உள்ள தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஓட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து அர்ஜென்டினா காவல் துறை வெளியிட்ட தகவல்களில், "ஓட்டல் மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது," என்று தெரிக்கப்பட்டுள்ளது. மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன், கடந்த ஆண்டு தனது பிரச்சினையை சரி செய்து கொள்ள பயிற்சி எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Readmore: குழந்தைகள் முன் உடலுறவு கொள்வதும், உடை மாற்றுவதும் பாலியல் துன்புறுத்தல்தான்!. நீதிமன்றம் அதிரடி!

Tags :
Advertisement