For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! பிரபல நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Popular Malayalam film actor Nirmal Penny passed away today due to a heart attack.
09:12 AM Aug 24, 2024 IST | Chella
பெரும் சோகம்     பிரபல நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணம்     திரையுலகினர் இரங்கல்
Advertisement

பிரபல மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

Advertisement

கடந்த 2012ஆம் ஆண்டு 'நவகதருக்கு ஸ்வாகதம்' படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். பின்னர் ஆமென், தூரம் உள்ளிட்ட 5 படங்களில் இவர் நடித்திருக்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'ஆமென்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நிர்மல். அவர் ஒரு கொச்சச்சன் (இளைய பாதிரியார்) பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தான், நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் காரணமாக இன்று அதிகாலை காலமானார் என்று தயாரிப்பாளர் சஞ்சய் படியூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில், ”என் இனிய நண்பருக்கு… எனது 'தூரம்' படத்தில் அவர் நடித்த ஆமென் என்ற கொச்சச்சன் பாத்திரமும் அவர் நடித்த மையக் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே இன்றும் போற்றப்படுகிறது.

மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை நிர்மல் பென்னி மரணமடைந்தார். எனது அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : உங்கள் பெண் குழந்தையை லட்சாதிபதி ஆக்கும் திட்டம்..!! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement