முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் சோகம்..!! காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

Comedian Karunakaran's father passes away
10:14 AM Sep 16, 2024 IST | Chella
Advertisement

பிரபல காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமான நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான கருணாகரன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா', தனுஷ் நடித்த 'தொடரி', அஜித் நடித்த 'விவேகம்' உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் கருணாகரன் நடித்திருக்கிறார். தற்போது கூட அவர் சூர்யாவின் 44-வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 77 வயதாகும் கருணாகரனின் தந்தை காளிதாஸ் இன்று காலமானார். கேபினட் செயலக அதிகாரியாக 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில், “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை என்று உயிர் இழந்தார்” என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

Tags :
தந்தை மறைவுதிரையுலகம்நடிகர் கருணாகரன்ரசிகர்கள்
Advertisement
Next Article