For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!! 100-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை..!!

It is feared that the death toll may exceed 100 after a boat capsized in a river in the West African country of Nigeria.
07:35 AM Oct 04, 2024 IST | Chella
பெரும் சோகம்     ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து     100 ஐ தாண்டும் பலி எண்ணிக்கை
Advertisement

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமிய திருவிழா நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு விழாவில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், சுமார் 60 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும் மீட்புக் குழுவால், மீட்கப்பட்டும் உயிர் தப்பினர்.

எஞ்சிய 80 பயணிகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படகு கவிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்கின்றன. படகுகளை முறையாக பராமரிக்காதது, அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுவது ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, தற்போது விபத்துக்குள்ளான படகில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், 100 பேர் மட்டுமே அப்படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : இந்த மந்திரத்தை மட்டும் இப்படி சொல்லிப் பாருங்க..!! உங்கள் திருமணம் உடனே நடக்கும்..!!

Tags :
Advertisement