முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் பெரும் சோகம்..!! திரையுலகினர் அஞ்சலி..!!

Director K.S. Ravikumar's mother passes away
10:19 AM Dec 05, 2024 IST | Chella
Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

Advertisement

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். 90களில் கமர்ஷியல் படங்களில் பெரும்பாலான படங்கள் யாருடையது என்று பார்த்தால் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் படங்கள் தான். 1990ஆம் ஆண்டு 'புரியாத புதிர்' படத்தில் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பல ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம் இவர் இயக்கத்தில் வெளிவந்த எக்கச்சக்க படங்கள், வெற்றி படங்களே. தற்போது இவர், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சில படங்களை தயாரித்து வருகிறார். இதற்கிடையே, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார்.

நேற்று மாலை அவரின் உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ருக்மணி அம்மாளுக்கு வயது 88. வயது மூப்பின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Read More : பத்திரப்பதிவு செய்வோருக்கு செம குட் நியூஸ்..!! இன்று சுபமுகூர்த்த தினம்..!! கூடுதல் டோக்கன் விநியோகம்..!!

Tags :
கே.எஸ்.ரவிக்குமார்தமிழ் சினிமாருக்மணி அம்மாள்
Advertisement
Next Article