பெரும் சோகம்!. ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி!. மத நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபரீதம்!
Nigeria: நைஜீரியாவில் மத நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் ஆண்டு தோறும் மவுலுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக கபாஜிபோ பகுதியில் இருந்து 300 பேரை ஏற்றிக்கொண்டு மத கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து, வீடு திரும்பியபோது, முண்டியிலிருந்து கபாஜிபோவுக்கு சென்றுக்கொண்டிருந்த மரப்படகு, நேற்று இரவு திடீரென நைஜர் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Readmore: சற்றுமுன்…! சிகிச்சைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்…!