மனைவியுடன் விவாகரத்து உறுதி: ஹர்திக் பாண்டியா இழக்கவேண்டிய சொத்துகள் எவ்வளவு?
Hardik Pandya: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், தன்னிடம் இருக்கும் சொத்துகளில் இருந்து சுமார் 60 கோடி ரூபாயை அவர் இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில தரவுகள் கூறுகின்றன.
இந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியாளரும் நடன கலைஞரான நடாஷாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அகஸ்தியா எனும் பெயரில் குழந்தையும் உள்ளது. கடந்த மே மாதம் முதல் இணையத்தில் ஹர்திக் பாண்டியா – நடாஷா தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதாமக தாங்கள் பிரிவதாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா அறிவித்துள்ளதாவது, “நாங்கள் இருவரும் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிவது என முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது. எங்களது மகனான அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார்.
அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார். இந்த விவாகரத்து முடிவையடுத்து,ஹர்திக் பாண்டியாவுக்கு உணர்வு ரீதியாக மட்டுமல்ல, நிதி ரீதியாகவும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது, இவரது ஆடம்பரமான சொத்துக்களில் சிலவற்றை நடாசாவுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் நிகர மதிப்பு மற்றும் சம்பளம்: 2024 ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியாவின் நிகர மதிப்பு சுமார் 91 கோடி ரூபாய் (தோராயமாக $11 மில்லியன்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது நிதி போர்ட்ஃபோலியோ ரூ.1.2 கோடியின் கணிசமான மாத வருமானத்தால் பலப்படுத்தப்பட்டுள்ளது, இது அவரது முந்தைய வருமானமான ரூ.25 லட்சத்தில் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு. ஹர்திக் பாண்டியாவின் சொத்து என்பது, அதிக அளவில் ஐபிஎல்-ஐ சார்ந்தது தான் இருக்கிறது என்றே கூறலாம். இந்த 2024ம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இது தவிர விளம்பர திரைப்படங்களிலும் பாண்டியா நடித்து வருகிறார்.
Gulf Oil, Star Sports மற்றும் Gillette போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றி வரும் ஹர்திக் பாண்டியா, அவர்களுடைய விளம்பரப்படத்தில் நடிக்க ஒரு விளம்பரத்திற்கு சுமார் 60 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகின்றார் என்று கூறப்படுகிறது. பல சொகுசு கார்களை வைத்துள்ள ஹர்திக் பாண்டியா, குஜராத்தின் Vadodara பகுதியில் சுமார் 3.6 கோடி ரூபாயில் ஒரு பெரிய பங்களாவும், மும்பை பந்தரா பகுதியில் 30 கோடி ரூபாய்க்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் வைத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. சமீபத்திய T20 உலகக் கோப்பை வெற்றியும் மேலும் அதிகரித்தது. பிசிசிஐயின் மிகப்பெரிய பரிசுத் தொகையான ரூ.125 கோடியில் இருந்து அவரது பங்கும் அடங்கும்.
பாண்டியாவின் சொகுசு கார்கள் மீதான காதல் அவரது விரிவான சேகரிப்பில் இருந்து தெரிகிறது. ஆடி ஏ6: இந்திய ரூபாய் 55.96 - 60.59 லட்சம். லம்போர்கினி Huracan EVO: ரூ. 3.22 - 4.10 கோடி, ரேஞ்ச் ரோவர் வோக்: 2.11 கோடி ரூபாய், ஜீப் காம்பஸ்: ரூ. 17.02 லட்சம் முதல், Mercedes G-Wagon: ரூ.1.62 - 2.42 கோடி, ரோல்ஸ் ராய்ஸ்: ரூ. 6.22 கோடி,
Porsche Cayenne: ரூ. 1.26 - 1.93 கோடி ஆகும்.
Readmore: கூட்டம் கூட்டமாக!. காட்டை விட்டு வெளியே வரும் அமேசான் பழங்குடியினர்!. வன்முறை அபாயம்!