பெரு வெள்ளம்!. கொத்துக் கொத்தாக பலியான உயிர்கள்!. உலகத்தின் பேரழிவுக்கான எச்சரிக்கை!. ஐ.நா!
Flood Warning: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக தெற்கு பிரேசிலில் மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் இது அமெரிக்க கண்டத்துக்கான பேரழிவு என்று ஐ.நா.எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் சுமார் 3,89,000 பேர் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர், இது பிராந்திய வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் வெள்ளப்பெருக்கு இருமடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐநாவின் காலநிலை நடவடிக்கை குறித்த சிறப்பு ஆலோசகரான ஆண்ட்ரூ ஹார்பர், வார இறுதியில் மாநில தலைநகரான போர்டோ அலெக்ரேவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர், அதை "பேய் நகரம்" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது "கிட்டத்தட்ட 40 நாட்களாக பெரும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அங்கு எலிகள் கூட ஓடவில்லை. அனைத்தும் இறந்துவிட்டன" என்று ஹார்பர் கூறியுள்ளார்.
மேலும், வெள்ளம் வடிந்த பிறகும், குடியிருப்பு வாசிகள் அப்பகுதிக்கு திரும்பவில்லை, அங்கு தெருக்களில் தண்ணீர் தேங்கியும் குப்பைகள் குவிந்தும் கிடக்கின்றன. எத்தனை பேர் காலநிலை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்பது பேரழிவிற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும், "இது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை, ஆனால் நாங்கள் இப்போது ஐந்து, பத்து ஆண்டுகளாக எச்சரிக்கை சமிக்ஞைகளைப் பார்க்கிறோம்," ஹார்பர் மேலும் கூறினார்.