முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஆத்திரம்.. நோன்பு கஞ்சியில் விஷம் வைத்து தாய் கொலை.!! - நீதிமன்றம் அதிரடி

Grandson, wife get life in prison for Mannarkkad Nabisa murder case
10:58 AM Jan 20, 2025 IST | Mari Thangam
Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே கரிம்புழாவைச் சேர்ந்த மம்முவின் மனைவி நபீஷா(71). இவரது மகன் பஷீர் (42), மருமகள் பசீலா (36). கடந்த 2016ம் ஆண்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை காணவில்லை. சந்தேகத்தின் பேரில் பஷீர், பசீலா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தம்பதியர் மன்னார்க்காட்டில் வாடகை வீட்டில் வசித்தனர்.

Advertisement

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் இருந்த தம்பதியர் 2016 ஜூன் 23ம் தேதி நோன்பு காலத்தில் நபீஷாவை கொலை செய்யும் நோக்கில் வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று கஞ்சியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதில் நபீஷா இறந்ததையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல் சடலத்தை மன்னார்க்காடு அருகே ஆரியம்பாவு பகுதியில் உள்ள தோட்டத்தில் வீசிவிட்டு தப்பினர்.

சடலத்தைக் கைப்பற்றி மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் பஷீர், பசீலா நபீஷாவை கொலை செய்தது தெரிய வந்தது. இக்கொலை வழக்கு விசாரணை மன்னார்க்காடு பழங்குடியினர் ஸ்பெஷல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் பஷீர் முதல் குற்றவாளியாகவும், ஃபசீலா இரண்டாவது குற்றவாளியாகவும் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலை, சாட்சியங்களை அழித்தல் மற்றும் சதி செய்தல் ஆகியவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மகன் பஷீருக்கும், மருமகள் பசீலாவிற்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜோமோன் ஜோன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

Read more ; மணமக்களுக்கு ஜாதகம் மட்டும் இல்ல.. திருமணத்திற்கு முன் இந்த பரிசோதனைகளும் அவசியம்..!!

Tags :
Mannarkkadmurder caseநோன்பு கஞ்சியில் விஷம்
Advertisement
Next Article