முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மூட நம்பிக்கையால் பிஞ்சு குழந்தையை கொலை செய்த தாத்தா..!! விசாரணையில் பகீர் தகவல்..!!

Shocking information has come out in the case of drowning a 38-day-old baby in Ariyalur.
04:54 PM Jun 17, 2024 IST | Chella
Advertisement

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள் சங்கீதா. இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடந்து ஓராண்டுகள் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. பாலமுருகன் தற்போது திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு பிறந்த 38 நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று, குழந்தையின் அழும் சத்தம் ஏதும் இல்லாத நிலையில், குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார் தாத்தா வீரமுத்து. பின்னர், வீரமுத்து வீட்டிலுள்ள அனைவரையும் எழுப்பி தேடியுள்ளார். அப்போது, குழந்தை குளியல் அறையில் உள்ள வாளியில் இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து பாட்டி ரேவதி பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் தாத்தா வீரமுத்துவை போலீசார் விசாரணையின் போது அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், தாத்தா உயிருக்கு ஆபத்து என்ற மூடநம்பிக்கை தாத்தா வீரமுத்துவை ஆட்கொண்டுள்ளது. அத்துடன் கடன் வரும் என்றும் கூறியுள்ளனர்.

அதனால் தனது பேரக் குழந்தை என்றும் பாராமல் தண்ணீர் பேரலில் குழந்தையை மூழ்கடித்துக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தாத்தா வீரமுத்துவை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

Read More : Train Accident | மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
ariyalurmurder
Advertisement
Next Article