தமிழகமே...! இன்று காலை 11மணி முதல் கிராம சபைக்கூட்டம்..! இதையெல்லாம் விவாதம் செய்ய அரசு உத்தரவு...!
தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று காலை 11 மணி அளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி அளவில் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை குறித்து விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல்(SELF CERTIFICATION) குறித்து விவாதித்தல் வேண்டும்.