முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்..!! தமிழ்நாடு அரசு அனுமதி..!!

The Tamil Nadu government has given permission to hold Gram Sabha meetings in all panchayats on August 15, Independence Day.
01:19 PM Aug 08, 2024 IST | Chella
Advertisement

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “ஆகஸ்ட் 15ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும். மேலும், 100 நாள் வேலைத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : வினேஷ் போகத்தின் இந்த நிலைக்கு அம்பானி மருத்துவமனை மருத்துவர் தான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
கிராம சபைக் கூட்டம்கிராம மக்கள்சுதந்திர தினம்
Advertisement
Next Article