முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்னும் 14 நாட்களில் நிறுத்தப்படும் GPay சேவை..! பணம் அனுப்ப முடியாது..! மாற்றாக எதை தேர்வு செய்யலாம்…!

On June 4, 2024, the U.S. version of the Google Pay app will no longer be available for use. This change does not impact the Google Pay app in India or Singapore, nor does it impact Google Wallet. Learn more about Google Wallet.
05:46 AM May 21, 2024 IST | Kathir
Advertisement

பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் GPay சேவை ஜூன் 4, 2024 முதல் Google மூடப் போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

இந்தச் செய்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் பயனர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Gpay மூடப்படும் என்ற இந்த செய்தி உண்மைதான். இதை கூகுள் நிறுவனமே உறுதி செய்திருக்கிறது. கூகுளின் இந்த முடிவால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படப் போகின்றன என்பதை தற்போது பார்க்கலாம். கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுத்தப் போகிறது. அதாவது, கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவில் அல்ல.. அமெரிக்காவில் தான்.

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet-க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும். கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Wallet-க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 180 நாடுகளில் Google pay ஆனது Google Wallet ஆக மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read More: கொடிய ஆபத்து!… வெஸ்ட் நைல் வைரஸ்!… நேபாளத்திற்கு எச்சரிக்கை!… உலக சுகாதார நிறுவனம்!

Tags :
g pay sevice end in us
Advertisement
Next Article