For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வருகிறது கட்டுப்பாடு.! 'AI' பயன்படுத்துவதில் புதிய ஒழுங்குமுறை சட்டங்கள்.! தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு.!

09:43 AM Feb 21, 2024 IST | 1newsnationuser4
வருகிறது கட்டுப்பாடு    ai  பயன்படுத்துவதில் புதிய ஒழுங்குமுறை சட்டங்கள்   தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு
Advertisement

Artificial Intelligence(AI) தொழில்நுட்பம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய அபாயங்களான டீப் ஃபேக் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகள் கவலையடைய செய்வதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் 'AI' தொழில்நுட்பத்திற்கான ஒழுங்குமுறை வரைவு வருகின்ற ஜூன்-ஜூலை மாதங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுதில்லியில் நடைபெற்ற நாஸ்காம் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், செயற்கை நுண்ணறிவுக்கான வரைவு கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், விரைவில் அதை வெளியிடும் என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் 'AI' தொழில்நுட்பத்தை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவது மற்றும் அதில் இருக்கக்கூடிய சாத்தியமான அபாயங்கள் மற்றும் தீங்குகளை நிவர்த்தி செய்வதே புதிய வரைவின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

'AI' தொழில்நுட்பத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்வோம். அதே நேரத்தில் அந்தத் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் தொழில்நுட்பம் 'AI' தொழில்நுட்பம் 25% கூட்டு வருடாந்திர விகிதத்தில் வளர்ச்சி பெற்று 2027 ஆம் ஆண்டில் ரூ.1.4 லட்சம் கோடியை எட்டும் என நாஸ்காம் நிறுவனத்தின் பிசிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்களது தளங்களில் எந்தவிதமான தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் தொடர்பான தரவுகளோ கண்டெண்டுகளோ இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டபூர்வமாக அறிவித்ததாக இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை கண்டறிவதற்கு வாட்ஸ்அப் செயலியில் பிரத்யேக உண்மைச் சரிபார்ப்பு ஹெல்ப்லைனைத் தொடங்குவதற்கு இந்தியாவின் எம்சிஏ மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

தவறான தகவல்களை அடையாளம் காண்பதற்கு ஃபேக்ட் செக் அவசியமான ஒன்று எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர்.இந்தியாவில் உள்ள அனைத்து இணைய தளங்களும்/இடைத்தரகர்களும் தங்கள் தளங்களில் தவறான தகவல்/டீப் ஃபேக் தங்கள் பயனர்களால் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய சட்டப்பூர்வமான கடமை உள்ளது,” என்று இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Due to the concerns over deep fakers and user harm central govt to draft regulations for the use of AI technology by june and july of this year.Central IT minister chandrasekar announced during nasscom meet.

Read More: https://1newsnation.com/15-year-girl-rape-case-hgh-court-cancel-the-bail-of-admk-counsellor/

Advertisement