அரசு ஊழியர்களுக்கு செக்..!! இனி நீங்க நினைச்ச டைம்க்கு வர முடியாது..!! மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு பலர் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை பயன்படுத்தவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சில ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதும், மாலை முன்கூட்டியே வீட்டிற்கு புறப்பட்டுச் செல்வதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊழியர்கள் காலை 9:15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும்.
ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் அனுபவத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் வருகை பதிவை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Read More : ’இதுவரை ஒரு சொட்டு சாராயம் கூட குடிச்சது இல்லையாம்’..!! அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த கண்ணுக்குட்டி..!!