For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்...! அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை... விண்ணப்ப கால அவகாசம் மேலும் நீட்டிப்பு...!

06:20 AM May 21, 2024 IST | Vignesh
குட் நியூஸ்     அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை    விண்ணப்ப கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் விண்ணப்பிக்க நேற்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு இடிருந்த நிலையில் மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5-ம் தேதி தொடங்கியது. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் சேர விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்பொழுது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் விண்ணப்பிக்க நேற்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு இடிருந்த நிலையில் மே 24-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும், 2-ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement