முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டிய பதவி’..!! ’அடங்கி செயல்படுங்கள்’..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

11:55 AM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம். தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது.

Advertisement

மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை. அதைவிடுத்து, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது.

மத்திய அரசுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியைப் பெற்று தரலாம். ஆளுநர் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தினந்தோறும் யாரைவாது கூட்டிவைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், ஆனால், தவறான பாடங்களை எடுக்கிறார். விழாக்களுக்கு செல்லட்டும், விதண்டாவாதம் பேசுகிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு ஆளுநர் அடங்கி செயல்பட வேண்டும். அவர் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம். கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டதால் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களை கேட்டு உச்சநீதிமன்றம் பதில் அளித்திருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும், ஆளுநர்கள் கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக இருக்கிறார்கள். அதனால் மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றார்.

Tags :
உச்சநீதிமன்றம்சட்டப்பேரவைதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article