முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது..!! உச்சநீதிமன்றம் காட்டம்..!!

01:20 PM Nov 24, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தது. இதில், ஜூன் 19, 20 மற்றும் அக்டோபர் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமர்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நவம்பர் 10ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதன் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் நேற்றிரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், “பேரவை நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும். பேரவை சிறப்புரிமைகளின் பாதுகாவலராக அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரவைத் தலைவர், பேரவையை ஒத்திவைப்பதில் அவரது அதிகார வரம்புக்குள் சிறப்பாகச் செயல்பட்டார்.

மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு சில அரசமைப்பு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், மாநில சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
உச்சநீதிமன்றம்சட்டப்பேரவை
Advertisement
Next Article