முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!! கடும் கோபத்தில் மு.க.ஸ்டாலின் அரசு..!! அடுத்த ஆக்‌ஷன் இதுதான்..!!

01:23 PM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன.

Advertisement

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், மீண்டும் சட்ட மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மசோதாக்களின் நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் எவை எவை ?

1) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

2) சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

3) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

5) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

7) தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

8) அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

9) தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பபட்டுள்ளது.

Tags :
ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாடு அரசுதலைமைச் செயலகம்
Advertisement
Next Article