முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு.. உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய ஆளுநர்..!! ஆரம்பமே இப்படியா..

Governor RN Ravi left without reading the speech in the assembly.
09:44 AM Jan 06, 2025 IST | Mari Thangam
Advertisement

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகம் வந்த ஆளுநர் ரவி, தமிழ்தாய் வாழ்த்து பாடிய சில நிமிடங்களிலே புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடந்த 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார். இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை அப்படியே வாசிப்பாரா? உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று சட்டப்பேரவை கூடியது. ஆனால் ஆளுநர் உரையை வாசிக்காமலையே அவர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Read more ; 2025ன் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் ஆளுநர் உரை..!!

Tags :
Assembly sessionGovernor RN Ravi
Advertisement
Next Article