முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப்பள்ளி படு மோசம்.. மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு புத்தகம் கூட படிக்க தெரியல..!! - மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்

Governor Ravi said that government schools are creating danger for the country by making everyone pass.
05:09 PM Sep 05, 2024 IST | Mari Thangam
Advertisement

அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன என ஆளுநர் ரவி தெரிவித்டுள்ளார்.

Advertisement

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுதான் உருவாக்கியது. தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது. ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன. அரசு பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் இரண்டு இலக்கு எண்களைக் கூட படிக்க முடியவில்லை. 40% மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க தெரியவில்லை.. 

கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது.

நமது பாரத நாடு வலிமையான ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட நாடு. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித் தரம் தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹெராயின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்" என பேசினார்.

Read more ; பண்டிகைய கொண்டாடுங்களே.. செப்டம்பர் 17 பொது விடுமுறை..!! தமிழக அரசு அறிவிப்பு..

Tags :
ChennaiGovernment schoolsGovernor Ravi
Advertisement
Next Article