For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே மகிழ்ச்சி..! அரசு சார்பில் தமிழகம் முழுவதும் குறைந்த விலையில் 1,000 மக்கள் மருந்தகம்...! அமைச்சர் மா.சு தகவல்

Government to set up 1,000 low-cost public pharmacies across Tamil Nadu
05:54 PM Dec 23, 2024 IST | Vignesh
மக்களே மகிழ்ச்சி    அரசு சார்பில் தமிழகம் முழுவதும் குறைந்த விலையில் 1 000 மக்கள் மருந்தகம்     அமைச்சர் மா சு தகவல்
Advertisement

மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத் துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertisement

சென்னையில் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டு பேசிய அமைச்சர்; திமுக அரசு பொறுப்பேற்றபிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கிறது. மேலும் கலந்தாய்வு மூலம் 34,000-க்கும் மேற்பட்ட பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜன.5-ம் தேதி அன்று 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழக முதல்வர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழகத்தில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்க உள்ளது என கூறினார்.

Tags :
Advertisement