முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்...! அரசு பள்ளி 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌...! அரசு உத்தரவு

Government school students will be given a confirmation certificate to get 7.5% reservation in medical and engineering courses.
07:04 AM Jul 28, 2024 IST | Vignesh
Advertisement

அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்.

Advertisement

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில்; அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர்க்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்காக அம்மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் உறுதிச்சான்றிதழ் (Bonafide Certificate) பெறுவதற்கு அணுகும்போது அவற்றை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. அம்மாணவர்கள் 6 முதல் 8 ஒரு பள்ளியிலும், 9 முதல் 12 வகுப்புகள் வேறு பள்ளியிலும் பயின்றுள்ள நிகழ்வுகளில் கடைசியாக பயின்றுள்ள பள்ளியிலிருந்து மேற்படி சான்றிதழ்கள் உடன் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிகிறது.

எனவே, இதுபோன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சார்பான விபரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையத் (EMIS) தளத்திலிருந்து பெற்று அதனடிப்படையில் மேற்படி உறுதிச் சான்றிதழை (Bonafide Certificate) எவ்வித தாமதமின்றி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்களுக்கு வழங்கிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறும் மேற்படி சான்றிதழை சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உடன் மேலொப்பம் செய்து வழங்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
7.5 reservationgovernment schoolreservationstudents
Advertisement
Next Article