முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை..!! உயரதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

A high-level review meeting was held under the chairmanship of Deputy Chief Minister Udhayanidhi Stalin.
07:37 AM Nov 21, 2024 IST | Chella
Advertisement

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் 100 பேருக்கு முதற்கட்டமாக அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இதற்கான பணி நியமன ஆணைகளை விரைந்து தயார் செய்வது தொடர்பான உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினோம். ஒவ்வொரு துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டோம். விளையாட்டுத்துறையை நோக்கி வரும் வீரர்களின் எதிர்காலம் சிறந்திட நம் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?

Tags :
govt jobsportsudhayanidhi stalin
Advertisement
Next Article