For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? குறைந்த செலவில் அதிக லாபம்!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

Government is providing subsidized loans to start own business. One such project can be seen in this post
05:54 PM Jul 10, 2024 IST | Mari Thangam
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா  குறைந்த செலவில் அதிக லாபம்   மத்திய அரசின் சூப்பர் திட்டம்
Advertisement

நம்மில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். இந்த கனவை நிறைவேற்ற அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி உதவி வருகிறது. அப்படி ஒரு திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க அரசு 60 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இது தவிர மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த தொழிலில் குறைந்த செலவு மற்றும் அதிக லாபம் என்பதால் விருப்பமுள்ளவர்கள் அரசின் மானியம் பெற்று மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கலாம். இதற்கு அரசு இலவச பயிற்சியும் வழங்குகிறது.

இது தொடர்பான முழு விவரங்களை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://dof.gov.in.pmmsy என்ற முகவரிக்குள் சென்று பார்க்கலாம். மீன் வளர்ப்புக்கு 20,000 கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டி அல்லது குளத்தை உருவாக்க வேண்டும். இதற்கு சுமார் ரூ.20 லட்சம் வரை செலவாகும். குளம் அமைப்பதற்கு நபார்டு வங்கி 60% வரை மானியம் வழங்குகிறது. குளம் அமைத்த பிறகு மீன்கள் மற்றும் அவற்றின் விதைகளை பராமரிப்பதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும். மேலும், இந்த தொழிலில் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். தொழில் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளில் உங்களுடைய வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்து விடும்.

Read more ; தொடர் தோல்வி.. அதிமுக நிர்வாகிகளுடன் இன்று முதல் 9 நாட்கள் EPS ஆலோசனை!!

Tags :
Advertisement