அரசு விடுமுறை நாட்கள் மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது...! ஆட்சியர் அதிரடி உத்தரவு...!
அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் கடுமையாகபாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதத்தை மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான வெள்ள நிவாரணம் பணிகளை ஒரு பக்கம் அரசு மேற்கொண்டு வருகிறது.
மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 18-ம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தரவில்; அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் அரசு விடுமுறை நாட்கள் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.