அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை..!! ஏப்ரல் மாதம் முதல் அமல்..!! என்ன காரணம் தெரியுமா..?
வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 100 வயதிற்கு மேல் அதிகமாக வாழும் நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28% பேர் 65 வயதை கடந்தவர்கள். இப்படியே சென்றால் காலப்போக்கில் வயதானவர்கள் மட்டுமே அதிகம் வாழும் நாடாக ஜப்பான் மாறிவிடும் என அச்சம் ஆட்சியாளர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கு தீர்வாக ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சரிக்கட்டும் வகையில், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற புதிய கொள்கையை டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதேபோல், தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே வேலைநேரத்தில் இருந்து செல்லும் புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2023இல் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன.
இதேபோல், குறைவான பிறப்பு விகிதமும், வயதானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. பணிக்கு செல்வோரின் உடல் மற்றும் மனநலத்தை சீராக வைத்து குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையிலும், பெண்கள் மட்டுமே குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ”பாராசிட்டமால் மாத்திரை தரமானது கிடையாது”..!! மாநிலங்களவையில் ஓபனாக போட்டுடைத்த மத்திய அரசு..!!