Good News : 53-வது ஆலோசனை முகாமை...! அடுத்த 12 மாதங்களில் ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு...!
குஜராத் மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும் அடுத்த 12 மாதங்களில் ஓய்வு பெற உள்ள மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக இன்று அகமதாபாத் நகரில் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 53வது ஆலோசனை முகாமை, மத்திய பணியாளர், ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜிந்தேந்திர சிங் வழிகாட்டுதலின்பேரில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை ஒருங்கிணைத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நல் ஆளுகை வசதியை அளிக்கும் ஒரு முயற்சியாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறுவது குறித்த ஆலோசனை முகாமை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை நடத்துகிறது. ஓய்வூதியர்கள் நெருக்கடியின்றி வாழ்வது என்பதை நோக்கிய புரட்சிகரமான முன்னெடுப்பாக மத்திய அரசில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களின் நலனுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு எளிமையான மாற்றத்தை அளிக்கும் வகையில் ஓய்வூதிய பலன்கள், குடும்ப ஓய்வூதியம், வருமானவரி விதிமுறைகள், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ், முதலீட்டு முறைகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைந்த ஓய்வூதியர்கள் தளமான பவஷியா (BHAVISHYA) இணையதளத்தில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்படுகின்றன.