இந்தியாவில் அறிமுகமானது Google Wallet ஆப்! இதில் இத்தனை அம்சங்கள் இருக்கா?
கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலெட் ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலெட் ஆப்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பேமென்ட் அம்சங்கள் நமது பணப் பரிவர்த்தனை முறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக google நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை செயலியான google pay அறிமுகமானதிலிருந்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
கூகுல் பே-வை தொடர்ந்து, கூகுள் வாலெட் ஆப் ஒன்றையும் கூகுள் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரில் கூகுள் வாலெட் ஆப் -ஐ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். ஆனாலும் ஆப்பிள் ஐபோனுக்கு இந்த செயலி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது கூகுள் வாலெட் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கூகுள் பே செயலிக்கு எந்தவொரு பாதிப்பு இருக்காது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே google pay இருக்கும்போது, ஏன் கூகுள் வாலெட் செயலி அறிமுகம் செய்ய வேண்டும்? என பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில், google வாலாட்டு செயலியில் கூடுதலாக சில அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் google pay செயலியில் செய்ய முடியாத சில கூடுதல் விஷயங்களை google வாலெட் செயலி மூலமாக செய்ய முடியும்.
google வாலெட் அம்சங்கள்:
1) முதற்கட்டமாக google வாலெட் செயலியில் Protection மற்றும் தொலைதூரத்தில் இருந்தே திருடப்பட்ட டிவைஸ் சேவையை முடக்கும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
2) பயனர்கள் தங்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் விவரங்களை google வாலெட் அக்கவுண்டில் சேமித்துக் கொள்ள முடியும்.
3) google வாலட்டைப் பயன்படுத்துபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எளிதாக பணம் அனுப்புவது மட்டுமின்றி, மொபைல் எண், ஈமெயில் ஐடி பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம். அதேபோல மற்றவர்களிடமிருந்தும் நேரடியாக google வாலெடு கணக்கிற்கு பணத்தைப் பெறலாம்.
4) இந்த செயலி போன் பே, google pay, paytm போன்ற செயல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காண்டாக்ட் லெஸ் முறையில் இதன் மூலமாக பணம் செலுத்தலாம்.
5) இறுதியாக, இணையத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கும்போது செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இதன் மூலமாக எளிதாகிறது.
6) உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.