விதிமுறைகளை மீறிய 17 கோடி போலி ப்ரொபைல்கள்.! தட்டி தூக்கிய கூகுள்.! புதிய டெக்னாலஜியால் அதிரடி.! 2023 ரிப்போர்ட்.!
கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன.
கூகுள் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக, தற்போது போலியான விபரங்களை கூகுள் மேப்புகளில் இருந்தும், தேடுதலில் இருந்தும் நீக்கியுள்ளது. 170 மில்லியனுக்கும் மேலான, தனது நிறுவனத்தின் கொள்கையை மீறிய மதிப்புரைகள், கூகுள் மேப் மற்றும் தேடுதல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 45 சதவிகிதம் கூடுதலாக கொள்கை மீறல் மதிப்புரைகள் இருந்ததாகவும் தெரிவித்தது. புதிதாக வடிவமைக்கப்பட்ட மெஷின் லேர்னிங் அல்காரிதம் மூலம் இதை செய்ததாக தெரிவித்தது.
12 மில்லியனுக்கும் மேலான போலி வணிக விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட, வேகமாக இயங்கும், இயந்திர கற்றல் அல்காரிதத்தை அறிமுகப்படுத்தியதாகவும் கூகுள் நிறுவனம் கூறியது. தினசரி அடிப்படையில் நீண்ட கால சிக்னல்களை ஆய்வு செய்து, அவை முடிவுகளை மேற்கொள்கின்றன. உதாரணத்திற்கு ஒரு மதிப்பாய்வாளர், ஒரே கருத்தை பல வணிகங்களில் இடும்போதும், ஒரு வணிகம் 1 முதல் 5 நட்சத்திர மதிப்பில் திடீரென உயரும்போதும் இதனை அல்காரிதம் கண்டுபிடித்து அகற்றி விடும்.
மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களை கண்டறிவதற்காக முயன்ற போது, 14 மில்லியன் கொள்கைகளை மீறும் வீடியோக்கள் கண்டுபிடித்து அகற்றப்பட்டதாகவும், அந்த நிறுவனம் தெரிவித்தது. முந்தைய ஆண்டை விட இது 7 மில்லியன் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹேக்கர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத வணிகங்களை கோருவதற்கு முயற்சித்த இரண்டு மில்லியன்களுக்கும் மேற்பட்ட முயற்சிகள் தடுக்கப்பட்டன. இதனால் வணிக உரிமையாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.
123,000 வணிக நிறுவனங்களில், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு மற்றும் துஷ்பிரயோக முயற்சிகளைக் கண்டறிந்த பிறகு, அவை தற்காலிக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. சிறு வணிக சேவைக்காக கடந்த வருடம், போலியான விமர்சனங்களை, மேப்ஸில் வெளியிட்ட நடிகருக்கு எதிராக கூகுள் நிறுவனம் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.