For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Android 15' புதிய அப்டேட்டின் டெவெலப்பர் வெர்ஷனை வெளியிட்ட கூகுள்.! இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

08:35 PM Feb 17, 2024 IST | 1newsnationuser7
 android 15  புதிய அப்டேட்டின் டெவெலப்பர் வெர்ஷனை வெளியிட்ட கூகுள்   இதன் சிறப்பம்சங்கள் என்ன
Advertisement

Android 15 ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் செல்போன்களின் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயர்த்தட்டு மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு வருகைக்குப் பிறகு சாமானியனுக்கும் சாத்தியமானது . மேலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐபோனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது என்ற கூறலாம். இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தொடர்பான தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 என அழைக்கப்படும் இந்த புதிய அப்டேட் பற்றிய முன்னோட்டத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

Advertisement

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் புதிய வெர்சனான ஆண்ட்ராய்டு 15 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான முன்னோட்டத்தை கூகுள் சமீபத்தில் வெளியிட்டது. வர இருக்கும் ஆண்ட்ராய்டு 15 ஆபரேட்டிங் சிஸ்டம் செல்போன்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மேம்பட்ட கேமராக்கள், கிராபிக்ஸ், டிஸ்ப்ளேக்கள் மற்றும் 'AI' போன்ற உயர் தொழில் நுட்பங்களை எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 15ல் புதிய வசதிகள்: புதிதாக வர ஆண்ட்ராய்டு 15 கேமரா செயல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான ஒளி நிலைகளில் கேமரா செயல் திறன் மேம்படுவதோடு சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் கேமராவின் ஃப்ளாஷ் லைட் மீதான சிறந்த கட்டுப்பாட்டையும் கொடுக்கிறது. மேலும் இது MIDI 2.0 ஆதரவுடன் நமது செல்போன்களை இசைக்கருவிகளாகவும் பயன்படுத்தும் வசதியை தருகிறது. ஆண்ட்ராய்டின் இந்த புதிய பதிப்பு பயனர்களின் பிரைவசியை பாதுகாப்பதோடு விளம்பரங்களுக்காக சாண்ட் பாக்ஸ் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய உடல்நலம் தொடர்பான தரவு வகைகளை ஆதரிக்க ஹெல்த் கனெக்டை மேம்படுத்தி உள்ளது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை: ஆண்ட்ராய்டு 15 மால்வேர் மற்றும் அவர்களின் பயில்களில் ஏற்படும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை தடுப்பதற்கான புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டில் பார்சல் ஸ்கிரீன் ஷேரிங் என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் திரையின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்யும் அம்சத்தை வழங்குவதால் பயனர்களின் பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.

வெளியீட்டிற்கான காலக்கெடு: ஆண்ட்ராய்டு 15 இன் முதல் டெவலப்பர் முன்னோட்டம் இப்போது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்கிறது. இருப்பினும், டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளைச் சோதிப்பது முக்கியமாகும், மேலும் பிழைகள் இருக்கலாம். மார்ச் மாதத்தில் கூடுதல் முன்னோட்டங்கள் செய்யப்படும், அதைத் தொடர்ந்து ஏப்ரலில் பீட்டா வெர்ஷன் வெளியிடப்படலாம். ஜூன் மாதத்திற்குள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலைத்தன்மையை அடையும். இதன் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது.

ஆண்ட்ராய்டு 15 ஸ்மார்ட்ஃபோன்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் பயனர் தனியுரிமையை மேம்படுத்துகிறது. மேம்பட்ட கேமரா கட்டுப்பாடுகள், விர்ச்சுவல் MIDI ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரைவசி கருவிகள் போன்ற புதிய அம்சங்களுடன், சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

English Summary

Google release the preview of Android 15 new updates first developer version. It has some improved features in privacy camera and virtual midi 2.0.the new version will release in June after complete testing process.

Tags :
Advertisement