For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள்.! வெளியேறும் இணை நிறுவனர்கள்.!

11:59 AM Jan 11, 2024 IST | 1newsnationuser7
நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள்   வெளியேறும் இணை நிறுவனர்கள்
Advertisement

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள துறையில் ஜாம்பவானாக விளங்கிவரும் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள் மற்றும் அதன் தயாரிப்புகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த மறுசீரமைப்பு குறித்து செமாஃபோர் நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

Advertisement

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை தங்களது தயாரிப்புகளிலும் பயன்படுத்தி கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருளின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்துவதை கிலோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் . இந்தப் பணி நீக்கத்தின் ஒரு பகுதியாக ஃபிட் பிட் கம்பெனியின் இணை நிறுவனர்களான ஜேம்ஸ் பார்க் மற்றும் எரிக் ஃபிரைட் மேன் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதளம் சார்ந்த துறைகளில் செயற்கை நுண்ணறிவு வேகமாக உலர்ந்து வருகிறது. ஓபன் AI நிறுவனத்தின் சேட் ஜிபிடி மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு துறைகளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனமும் அதன் தயாரிப்பான கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள் பயனர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவும் அவர்களின் தனிப்பட்ட பணிகளை பிரத்தியேகமாக கையாளும் வகையில் மாற்றியமைக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் அப்கிரேட்டட் வெர்சனில் இந்த புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

2023 செப்டம்பர் மாத தகவலின் படி கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் 1,80,000 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த வருட ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது கூகுள் நிறுவனம் எடுத்த கடினமான முடிவுகளில் ஒன்று என அதன் சிஇஓ சுந்தர் பிச்சை கடந்த மாத பேட்டியின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதன் சாதனங்களான பிக்சல் நெக்ஸ்ட் மற்றும் பிட் பிட் போன்ற சாதனங்களின் ஹார்டுவேர்களிலும் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும் கோகுல் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதைத் தொடர்ந்து கூகுளின் சேவைகள் மற்றும் சாதனங்களின் தயாரிப்பு குழுக்களிலும் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன . இந்த புதிய மாடலின் அடிப்படையில் பிக்சல், நெஸ்ட் மற்றும் ஃபிட்பிட் போன்ற சாதனங்களின் ஹார்டுவேர் தயாரிப்புகளை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்படும். இந்த புதிய நிர்வாகத்தின் மூலம் அந்த நிறுவனத்தின் வெவ்வேறான தயாரிப்புகள் மற்றும் பணிகள் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெறும்.

Tags :
Advertisement