முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பெங்களூரு தோசை, மும்பை பாவ் பாஜி...' இந்தியாவில் பிடித்த உணவு இதுதான்! - கூகுள் CEO சுந்தர் பிச்சை ஓபன் டாக்

03:14 PM May 19, 2024 IST | Mari Thangam
Advertisement

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய நகரங்களில் கிடக்கும் தனக்குப் பிடித்த உணவுகள் என்னென்ன என்று கூறியிருக்கிறார்.

Advertisement

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது தான் உண்மை. இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் ஏயோஸ் நிறுவனத்தின் நிறுவனர் வருண் மய்யாவுடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தனது பயணங்களைப் பற்றி பேசிய அவர், தனக்குப் பிடித்த இந்திய உணவுகள் குறித்து விரிவாகக் கூறியிருக்கிறார்.

சுந்தர் பிச்சை பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையி ஆகிய மூன்று மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் தனக்குப் பிடித்த உணவைத் தேர்ந்தெடுத்தார். பெங்களூருவில் தோசை, டெல்லியில் சோளா பூரி, மும்பையில் பாவ் பாஜி சாப்பிடுவது பிடிக்கும் என்று அவர் கூறினார்.

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் வளர்ந்தவர். ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை பதவிக்கும் உயர்ந்தார்.

தற்போது சுந்தர் பிச்சை அளித்திருக்கும் யூடியூப் பேட்டி இணையத்தில் வைரலாவதோடு, தமிழர்களால் இன்னொரு கேள்வியை எழுப்பவும் காரணமாகி உள்ளது. பெங்களூரு, டெல்லி, மும்பை என இந்திய மாநகரங்களின் உணவுகளை மெச்சிக்கொண்ட சுந்தர் பிச்சை, அவர் பிறந்து வளர்ந்த தமிழகத்தின் சிறப்புமிக்க உணவுகளில் ஒன்றைக்கூட குறிப்பிடாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். தமிழர் உணவுகள் சுந்தர் பிச்சைக்கு பிடிக்காதா அல்லது தமிழகத்தை அவர் மறந்துவிட்டாரா என்றும் வினவி வருகிறார்கள்.

“கெஜ்ரிவால் காங்கிரஸின் பொத்தானை அழுத்துவார், நான் ஆம் ஆத்மியின் பொத்தானை அழுத்துவேன்”- ராகுல் காந்தி!

Advertisement
Next Article