பிளே ஸ்டோரிலிருந்து 20 லட்சம் அப்ளிகேஷன்களை தடை செய்த Google.!! முழு விவரம்.!!
கூகுள் நிறுவனம் பாலிசி மீறுதலில் ஈடுபட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான செயலிகளை தடை செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 2.28 மில்லியன் பயன்பாடுகள் கூகுளின் கொள்கைகளை மீறி செயலிகளை வெளியிட்டதால் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக google தெரிவித்துள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து 333,000 மோசமான கணக்குகளையும் தடை போலி கணக்குகளையும் கூகுள் தடை செய்து இருக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட மால்வேர் செய்திகள் மற்றும் குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் மோசடி வலை பின்னும் செயலிகள் ஆகியவற்றின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.
பேக்ரவுண்ட் லொகேஷன் மற்றும் எஸ்எம்எஸ் வெரிஃபிகேஷன் போன்ற முக்கியமான அனுமதிகளை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, கிட்டத்தட்ட 200,000 செயலிகளின் சமர்ப்பிப்பை கூகுள் நிராகரித்துள்ளதாக அவற்றின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.
பயணர்களின் பிரைவசியை பாதுகாப்பதற்காக சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து முக்கியமான டேட்டா பரிமாற்றம் மற்றும் பகிர்வை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ள கூகுள் பயனர்களின் பிரைவசியை மேம்படுத்துவதற்காக 790,000 க்கும் மேற்பட்ட செயலிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் 31 சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் களில் மாற்றம் செய்து வருவதாக கூகுள் தனது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
கூடுதலாக பிளே ஸ்டோருக்கு வெளியே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்களில் இருந்து ஆண்ட்ராய்டு பயனர்களை பாதுகாப்பதற்காக ரியல் டைம் ஸ்கேனிங் மூலம் கூகுள் பிளே ப்ரொடெக்டை மேம்படுத்தி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மெஷின் லேர்னிங் அலாக்ரிதம் ஆகியவை கூகுள் மதிப்பாய்விற்காக சமர்ப்பிக்கப்படும் அத்தனை செயல்களையும் பகுப்பாய்வு செய்து பயன்பாட்டை ஒப்பீடு செய்வதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய செக்யூரிட்டி அளவீடுகள் பயன்பாட்டிற்கு முன்பாகவே 50 லட்சம் ஆஃப்-ப்ளே செயலிகளை கண்டறிந்து இருக்கிறது. இந்த செயல்பாடுகள் உலகெங்கிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களை பாதுகாக்கிறது எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
பயனர்களுக்கு அவர்களது தனிப்பட்ட தகவல்களின் மீது அதிக கட்டுப்பாடுகளை வழங்குவதற்காக புதிய அக்கவுண்ட் கிரியேஷனை வற்புறுத்தும் செயலிகள் ஆன்லைனில் கிரியேட் செய்யப்பட்ட அக்கவுண்ட் மற்றும் ஒருவரது தனிப்பட்ட தகவல்களை டெலிட் செய்வதற்கான விருப்பத்தையும் வழங்க வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கூகுள் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் ஒரு பயனர் தனது ஸ்மார்ட் போனில் தீங்கிழைக்கக் கூடிய மால்வேர் செயலிகளை கண்டறிந்தால் அவற்றை தனிமை படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த அம்சம் விண்டோஸில் உள்ள வைரஸ் தடுப்பு பைல்களைப் போலவே வைரஸ்களை தனிமைப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஆண்ட்ராய்டின் அறிக்கையின் படி சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 பீட்டாவானது கூகுள் ப்ளே சர்வீசஸ் அல்லது பிளே ஸ்டோர் போன்ற சிஸ்டம் ஆப்ஸை ஆப்ஸை தனிமைப்படுத்தி அவற்றின் மீது கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது பயன்பாட்டைத் திறம்பட தனிமைப்படுத்தி, அதன் திறன்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் பயனரின் சாதனத்தில் பாதகமான செயல்களைச் செய்வதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.