குட்நியூஸ்!… பிஎப் வட்டிப் பணம்!…. அக்கவுண்ட் பேலன்ஸை உடனடியா செக் பண்ணுங்க!
பிஎப் வட்டி பணத்தை அரசு விரைவில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு இதை பரிசீலனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு 2022-23 நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி செலுத்துவதாக அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச தொகையாகும். முன்னதாக, 8.1 சதவீத வட்டியில் மத்திய அரசு பணம் அனுப்பியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழலில், பிஎப் வட்டித் தொகையை விரைவில் பயனாளிகளின் கணக்கில் அரசு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பணம் அனுப்பும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நவம்பர் மாத இறுதிக்குள் அது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பிஎப் ஊழியர்களின் கணக்கில் மத்திய அரசு 8.15 சதவீத வட்டியை டெபாசிட் செய்யும். PF ஊழியர்கள் கணக்கில் ரூ. 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தினால், 8.15 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் ரூ.41,000 சம்பாதிக்கலாம். இது தவிர, பிஎப் ஊழியர்களின் கணக்கில் ரூ.6 லட்சம் இருந்தால், சுமார் ரூ.49,000 வட்டி லாபம் கிடைக்கும். இது தவிர, PF கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகையை சரிபார்க்க நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே சரிபார்க்கலாம்.
உங்கள் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள முதலில் உமாங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் பிஎப் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்று பார்க்கலாம். பேலன்ஸ் மட்டுமல்லாமல், பிஎப் தொடர்பான பல்வேறு சேவைகள் இதில் கிடைக்கின்றன. இது தவிர, அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்குச் சென்று பிஎப் பேலன்ஸ் எவ்வளவு என்று சரிபார்க்கலாம்.