முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் குட்நியூஸ்!… என்ன தெரியுமா?

01:09 PM Jan 30, 2024 IST | 1newsnationuser3
Advertisement

2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஈட்டிய விடுப்பு 240 நாட்களில் இருந்து 300 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூடவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இறுதி பட்ஜெட் இதுவாகும். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இது இடைக்கால பட்ஜெட்டாக கருதப்படுகிறது

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு 240ல் இருந்து 300 ஆக அதிகரிக்கலாம். ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை அதிகரிப்பது குறித்து மோடி அரசு விரைவில் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றங்கள் குறித்து, தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் சிலருக்கு இடையே வேலை நேரம், வருடாந்திர விடுப்பு, ஓய்வூதியம், பிஎஃப், வீட்டுச் சம்பளம், ஓய்வு போன்ற புதிய விதிகள் குறித்து அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது.

இதில் ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை 240ல் இருந்து 300ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை பட்ஜெட்டில் இது குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சங்கங்களுடன் தொடர்புடையவர்கள் ஈட்டிய விடுப்பின் வரம்பை 240லிருந்து 300 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொடர்பான புதிய சட்டங்கள் 2020 செப்டம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
300 நாட்கள் விடுமுறை?அரசு ஊழியர்கள்பட்ஜெட்டில் காத்திருக்கும் குட்நியூஸ்
Advertisement
Next Article