பல் உடைந்துவிட்டதா?. கவலை வேண்டாம்!. மீண்டும் வளரச்செய்யும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!.
Toregem Biopharma: உடைந்த பற்களை மீண்டும் வளர்க்கும் மருந்து விரைவில் வரவுள்ளது. இதுதொடர்பாக எலிகள் மீது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
20 - 30 வயதில் உங்கள் பற்கள் சில காரணங்களால் விழுந்தால், பதற்றம் கொள்ள வேண்டாம், ஏனெனில் இப்போது குழந்தை பருவத்தில் பால் பற்கள் போல் அவற்றை வளர்ப்பது மிகவும் எளிதானது. அதாவது இப்போது புதிய பற்கள் எந்த வயதிலும் வளரும். ஜப்பானிய ஸ்டார்ட்அப் ஒன்று பற்களை வளர்ப்பதற்கு ஒரு மருந்தை தயாரித்துள்ளதாக கூறுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், 2030க்குள் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.
உண்மையில், வயதான காலத்தில் பல் உடைவது ஒரு தீவிர பிரச்சனையாக மாறும். பல் உள்வைப்பு, பல் போன்ற சிகிச்சையின் உதவியை எடுத்துக் கொண்டாலும், அவை மிகவும் விலை உயர்ந்தவை ஆக இருக்கும். ஆனால், நீண்ட காலத்திற்கு இந்த மருந்தின் வரவு மருத்துவத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, பற்களை மீண்டும் உருவாக்கும் இந்த மருந்து மனித சோதனை கட்டத்தில் உள்ளது. தற்போது வரை இந்த மருந்தை எலிகள் மீது பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய டோரேகிராம் பயோஃபார்மா தயாரித்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் பல் வளரும் மருந்து சந்தைக்கு வரலாம் என்பதே ஸ்டார்ட்அப்பின் இலக்கு. பிறப்பிலிருந்து சில பற்களை இழந்த நோயாளிகளுக்கு, அதாவது பிறவி அனோடோன்டியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மருந்து எப்படி வேலை செய்கிறது? இந்த மருந்து பற்களின் வளர்ச்சியை நிறுத்தும் புரதத்தை தூண்டி பற்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மருந்து பாதுகாப்பு சோதனையின் முதல் கட்டம் மிகவும் நன்றாக உள்ளது. அதன் இரண்டாம் நிலை சோதனை 2025 ஆம் ஆண்டில் தொடங்கும். இதில், மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மதிப்பீடு செய்யப்படும். இந்த மருந்து 2 முதல் 7 வயது வரையிலான பிறவி அனோடோன்டியா நோயாளிகளுக்கு வழங்கப்படும். இந்த ஆன்டிபாடி மருந்தின் விலை 1.5 மில்லியன் யென் அதாவது சுமார் ஒரு லட்சம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: விஷமாக மாறிய வெள்ளரிக்காய்!. 5 வயது குழந்தை பலி!. மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!