For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Holiday: குட்நியூஸ்!... தமிழகத்தில் ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை?... வெளியான முக்கிய தகவல்!

07:58 AM Mar 17, 2024 IST | 1newsnationuser3
holiday  குட்நியூஸ்     தமிழகத்தில் ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை     வெளியான முக்கிய தகவல்
Advertisement

Holiday: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அன்று பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதன்படி ஜூன் 5 அல்லது 6ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 வரை தள்ளிப்போகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: ADMK கொடி மற்றும் சின்னம்!… ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு!

Tags :
Advertisement