முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்..!! இனி ரேஷன் கடைக்கு ஒருமுறை சென்றாலே போதும்..!! ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!!

08:07 AM Apr 17, 2024 IST | Chella
Advertisement

ரூ.1,000 உரிமைத்தொகை விநியோகம் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்றன. மேலும், மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.

Advertisement

இந்நிலையில், 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், "வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட இவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள்வரை, ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் மூலமாக பொருட்களை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது புதிய ஏற்பாட்டினை அரசு செய்துள்ளது. அதேபோல, தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கார்டுதாரர்களை தேவையில்லாமல் வெயிலில் அலைக்கழிக்கக்கூடாது என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது. அதாவது, வெயில் காரணமாக, பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாம்.

அதேபோல, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டு, ஒரே தவணையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கலாம்..!! சூப்பர் அம்சங்களுடன் அறிமுகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!

Advertisement
Next Article