குட்நியூஸ்!. இனி மாதம் ரூ.2000 கிடைக்கும்!. மகளிர் உரிமை தொகையை அதிகரிக்க திட்டம்!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து உரிமை தொகை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக அரசின் அசத்தல் திட்டம் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டத்தை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்தியும் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்டப்பேரவையில் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என பெயரிட்டார். இந்த திட்டத்தின் பணிகள் அடுத்தடுத்து தொடங்கியது. விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
இதில் 1 கோடியே 15 லட்சத்து 27,172 மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான மக்களின் விண்ணப்பங்கள் உரிய தகுதிகள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிதாக 1.48 லட்சம் பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. அவர்களுக்கும் மாதம், மாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் தகுதிகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ள இந்த மகளிர் உரிமைதொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் காபி அடித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்நாடாகவில் நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதே போல ஆட்சிக்கு வந்ததுத் முதல் திட்டமாக மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல தெலங்கானா மாநிலத்திலும் மகளிர்களுக்கு மாதம், மாதம் உதவிடும் வகையில் 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே தமிழக அரசை பொறுத்தவரை தற்போது ஆயிரம் ரூபாய் வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகை 2ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: கர்ப்பிணிகளே கவனம்!. தாய்ப்பால் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கிறது!. ஆய்வில் தகவல்!