For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட்நியூஸ்!… UPI Lite-ல் வந்தது புதிய வசதி!… இனி பேலன்ஸ் இருப்பை தானாக நிரப்ப முடியும்!

A new facility has been introduced to automatically transfer funds from the bank account to UPI Lite after the amount in UPI Lite goes below the limit.
07:55 AM Jun 08, 2024 IST | Kokila
குட்நியூஸ் … upi lite ல் வந்தது புதிய வசதி … இனி பேலன்ஸ் இருப்பை தானாக நிரப்ப முடியும்
Advertisement

UPI Lite இல் உள்ள பணம் வரம்புக்குக் கீழே சென்ற பிறகு, வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite-க்கு தானாகவே மாற்றப்படும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது

Advertisement

சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் கட்டணங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு UPI Lite, சாதனத்தில் உள்ள வாலட் மூலம் விரைவாகவும் தடையின்றியும் சிறிய மதிப்புக் கட்டணங்களைச் செலுத்த செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மக்கள் ஒவ்வொரு முறையும் பணத்தை மாற்ற வேண்டிய நிலை, அதாவது டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

இந்தநிலையில், தற்போது, UPI Lite இல் உள்ள பணம் வரம்புக்குக் கீழே சென்ற பிறகு, வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite-க்கு தானாகவே மாற்றப்படும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, UPI லைட் வாலட்டின் தினசரி வரம்பு ரூ.2,000, ஒருமுறை கட்டணம் செலுத்துவதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.500. இது டிஜிட்டல் பேமெண்ட்டுகளை விரைவாகவும் தடையின்றியும் செய்கிறது. தற்போது, ​​UPI Lite ஆப்ஸ் எந்த நேரத்திலும் அதிகபட்சமாக ரூ.2,000 வரை வைத்திருக்க முடியும்.

புதிய தானாக நிரப்பும் வசதி: UPI Lite-ஐ பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, வாடிக்கையாளர்கள் நிர்ணயித்த வரம்பை விட குறைவாக இருந்தால், UPI Lite வாலட்களை தானாக நிரப்பிக்கொள்ளும் வசதியை e-Mandate கட்டமைப்பின் கீழ் கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது" என்று நிதிக் கொள்கை கூட்டத்தில் RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வசதி, முன் வரையறுக்கப்பட்ட வரம்புக்குக் கீழே இருப்புத் தொகை குறையும் போது, ​​பயனர்களின் UPI லைட் வாலட்கள் தானாக டாப்-அப் செய்யப்படுவதை உறுதி செய்வதன் மூலம், சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட்டுகளைச் செய்வதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: நியூயார்க்கில் மழை!… நாளை இந்தியா- பாக்., போட்டி நடக்குமா?… வானிலை முன்னறிவிப்பு!

Tags :
Advertisement