For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட்நியூஸ்!… கணவன் - மனைவிக்கு மாதம் ரூ.10,000 வருமானம்!… மத்திய அரசு மாஸ் பிளான்!

05:57 AM Apr 10, 2024 IST | Kokila
குட்நியூஸ் … கணவன்   மனைவிக்கு மாதம் ரூ 10 000 வருமானம் … மத்திய அரசு மாஸ் பிளான்
Advertisement

Atal pension yojana: முதியோர்களுக்கு வருமான பாதுகாப்பு அளிக்கும் வகையில் கணவன் மனைவி இருவரும் பயன்பெறுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Advertisement

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறிப்பாக முதியோர்களுக்கு வருமான பாதுகாப்பு அளிக்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்படது. இந்த திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, பட்ஜெட் உரையில் அறிவித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மே 9, 2015 அன்று, திட்டத்தை கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். அவற்றுடன் மேலும் 2 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சரஷா பீமா யோஜனா போன்ற காப்பீடு திட்டங்கள் தொடங்கப்பட்டன. அடல் பென்ஷன் யோஜனா என்பது ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். 14 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். அவ்வாறு திட்டத்தில் இணைபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும்.

2022 -23 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சுமார் 75 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த திட்டத்தில் சுமார் 4 கோடி மக்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணையலாம். இருவருக்கும் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.5,000 வழங்கப்படும். அதன்படி கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 வழங்கப்படும். நீங்கள் 18 வயதில் அடல் பென்ஷன் திட்டத்தில் இணைந்தால் மாதம் ரூ.42 முதம் ரூ.210 வரை செலுத்த வேண்டும். முதலீடு செய்வபரின் வயதை பொறுத்து இந்த அளவு அதிகரிக்கிறது. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.

இந்த ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் பணம் செலுத்தலாம். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனிலும், வங்கிகளிலும் கிடைக்கின்றன. விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை நிரப்பிய பிறகு, படிவத்தை வங்கியில் சமர்பிக்க வேண்டும். மொபைல் எண், ஆதார் நகல் உள்ளிட்டவற்றையும் படிவத்துடன் சமர்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதற்கான குறுஞ்செய்தி உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும்.

இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேல் ரூ.1,000 ஓய்வூதியம் பெற மாதம் ரூ.42 செலுத்த வேண்டும். ரூ.5,000 பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். இதன் மூலம் கணவன்,மனைவிக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

Readmore: மொத்தம் ரூ.535 கோடி… பாஜக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்…!

Advertisement