For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு செம்ம குட் நியூஸ்: மளமளவென குறைந்த தங்கம் விலை..! 800 ரூபாய் குறைவு..!

10:09 AM May 24, 2024 IST | Kathir
பெண்களுக்கு செம்ம குட் நியூஸ்  மளமளவென குறைந்த தங்கம் விலை    800 ரூபாய் குறைவு
Advertisement

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை நேற்றைய தினம் 880 ரூபாய் குறைந்த நிலையில் தற்போதுள்ள விலை குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் 800 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், சவரன் 800 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 96.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More: சூப்பர்…! கணவன், மனைவி இருவரும் மாதம் ரூ‌.10,000 பெறும் பென்ஷன் திட்டம்…!

Advertisement