முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாக்காளர்களே செம குட் நியூஸ்..!! இன்று அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

07:28 AM Apr 19, 2024 IST | Chella
Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இதில் வாக்களிக்க 6 கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் மக்களவை தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ”கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் வாக்காளர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்லலாம் என மண்டல துணை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Read More : பிரபல Everest நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி..!! அதிரடியாக தடை விதிக்க அரசு..!!

Advertisement
Next Article