ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கேஷ்பேக் சலுகை..!! அதிரடியாக அறிவித்த இந்திய ரயில்வே..!!
நம் நாட்டில் பொது போக்குவரத்தான ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், ஊருக்கு செல்வோர் தற்போது பலரும் ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், பேருந்தை விட ரயிலில் கட்டணம் குறைவு. இதற்கிடையே, இந்திய ரயில்வே நிர்வாகமும் பல முக்கியமான வசதிகளை பயணிகளுக்காக அவ்வபோது அப்டேட் செய்து வருகிறது.
R-Wallet என்பது UTS மொபைல் செயலியில் உள்ள ஒரு வாலட் வசதியாகும். இது இந்திய ரயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எளிதில் வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் உதவியாக இருந்து வருகிறது. இப்போது, R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் செயலி அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை இப்போது பயணிகள் டிக்கெட் எடுக்கும் போதே பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து, டிக்கெட் எடுப்பதை எளிமையாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. UTS செயலியில் R-Wallet அல்லது ATVM மூலமாக டிக்கெட் வாங்குவோர் இந்த கேஷ்பேக் சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா..? சென்னை வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!