For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து வந்த புகார்..!! ஆக்‌ஷன் எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..!! இனி கட்டணம் ரொம்ப கம்மி..!!

08:33 AM May 15, 2024 IST | Chella
தொடர்ந்து வந்த புகார்     ஆக்‌ஷன் எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியம்     இனி கட்டணம் ரொம்ப கம்மி
Advertisement

மின்கம்பிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, புதிய மின்சார இணைப்புகளுக்கான மேம்பாட்டுக் கட்டண உயர்வினை மாற்றி அமைத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் மின் விநியோகம் செய்யப்டுகிறது. ஆனால், கிராமங்கள் மற்றும் சிறு மற்றும் ஓரளவு பெரிய நகரங்களில் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கம்பிகள் மற்றும் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் உயர்த்தப்பட்ட மின்கம்பிகள் மூலம் மும்முனை இணைப்பு மூலம் வினியோகம் செய்ய மேம்பாட்டுக் கட்டணமாக ரூ.2,000 மற்றும் ஒருமுனை இணைப்புக்கு ரூ.2,800-ம் வசூலிக்கிறது.

அதேநேரம் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் வினியோகம் செய்யப்பட்டால், ஒருமுனை இணைப்புக்கு ரூ.7,000 மற்றும் மும்முனை இணைப்புக்கு ரூ.5,000 மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால், பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் வினியோகம் செய்யப்படாத பகுதிகளிலும் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதேபோல் பாதி பூமிக்கு அடியில், பாதி உயர்த்தப்பட்ட மின் கம்பங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மின் நுகர்வோர்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தனர்,.

இதுபற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மின்சார வாரியத்திற்கு , ஆணையம் வலியுறுத்தியது. இதையடுத்து, 75 சதவீதத்துக்கும் அதிகமான பூமிக்கடியில் கேபிள்களைக் கொண்ட மின்சார வினியோக நெட்வொர்க்குகளில், அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. அதேநேரம் பூமிக்கடியில் கேபிள் நெட்வொர்க் 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள பகுதிகளில், குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம், புதிய மின்சார இணைப்புகளுக்கான மேம்பாட்டுக் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. மின் வாரியத்தின் கட்டண அமைப்பின் மென்பொருள் மாற்றி அமைக்கப்படுவதால் மேம்பாட்டு கட்டணம் இனி அதிகமாக இருக்காது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read More : ’திருமணமான பிறகு ஹோட்டலில் என்ன வேலை’..? ’ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா’..!! முகத்திரையை கிழித்த பாடகி சுசித்ரா..!!

Advertisement